
நாட்டில் இந்த வாரம் முதல் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தற்போது சந்தையில் காணப்படும் எரிவாயு தட்டுப்பாட்டினை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
இதேவேளை, நாட்டில் காணப்படும் மின்சார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு பிரதமர் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





