நாட்டு மக்களுக்காக எதுவும் செய்யத் தயாராகிறார் ரணில் விக்கிரமசிங்க !

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதையும் செய்யத் தயாராகவுள்ளேன். நாட்டினதும் மக்களினதும் நலன் கருதியே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்றேன். அதில்
கலந்து கொண்ட பின்னர் மக்கள் மத்தியில் ஓர் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த மாநாட்டைக் கூட்டச் சொல்லி பல மாதங்களுக்கு முன்னரே அரசிடம் கோரியிருந்தேன். காலம் தாழ்த்தியாவது மாநாட்டைக் கூட்டி பிரச்சினைகளை ஆராய்ந்திருக்கின்றார்கள். இடைக்கால அரசாங்கம் தொடர்பாக அரசதரப்பில் இருந்து நேரடியாக என்னுடன் யாரும் எதுவும் பேசவில்லை. அப்படியான வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டால் பரிசீலித்து முடிவெடுப்பேன் இவ்வாறு முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Leave a Reply