யாழ். கலாசார மையத்துக்குள் புகுந்த சிங்கள மொழி – கடைசிக்கு தள்ளப்பட்ட தமிழ் மொழி!

யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் தமிழ் மொழி கடைசிக்கு தள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தை, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இன்று திங்கட்கிழமை நண்பகல் காணொளியில் எளிமையாக திறந்து வைத்தனர்.

இதில் முதலில் சிங்கள பெயர்ப் பலகை, அடுத்து ஆங்கில பெயர்ப் பலகை, இறுதியாக தமிழ் பெயர்ப் பலகை என்ற ஒழுங்கில் பெயர்ப் பலகைகள் பொறிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இரண்டாம் மொழியாக தமிழ் மொழி பெயர்ப் பலகை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கூட இல்லாமல் கடைசிக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply