இன்று 7 மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு

கொழும்பு, மார்ச் 29

இன்றைய தினம் நாட்டில் 7 மணித்தியாலத்துக்கும் அதிக காலம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி A முதல் L வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையில் 7 மணி நேரமும் 30 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அதேபோன்று P முதல் W வரையிலான வலயங்களில் காலை 8.30ல் இருந்து இரவு 11 மணி வரையில் 7 மணி நேரமும், 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply