நானே பிரதமர்; அடுத்த தேர்தல்களிலும் நாங்களே வெல்வோம்! – மஹிந்த நம்பிக்கை

நாட்டின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

எனது பதவிக்காலம் முடியும் வரை இலங்கையின் பிரதமராகத் தொடர்ந்து பணியாற்றுவேன். அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலிலும் எங்கள் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என்றும் மஹிந்த நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டில் பிரச்சினைகள் உள்ள போதும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் பற்றிய ஊகங்கள் அனைத்தும் பொய். எனக்கும் ரணிலுக்கும் சஜித்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதெல்லாம் பொய்.

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, மின்சார, எரிபொருள் மற்றும் எரிவாயு சிக்கல்கள் எப்போது முடிவுக்கு வரும்? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், இந்த பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும் என்று கூறினார்.

Leave a Reply