காணாமல் போயிருந்த மாணவி கால்வாயிலிருந்து சடலமாக மீட்பு!

காணாமல் போயிருந்த மாணவி கால்வாயிலிருந்து சடலமாக மீட்பு!

பெல்மடுல்ல உடதுல பகுதியிலுள்ள கிரிந்தி எல கால்வாயிலிருந்து பாடசாலை மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பெருன்துடுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லெல்லுபிட்டி பகுதிக்கு செல்வதாக கடந்த 26 ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தமை பின்னர் தெரியவந்ததுடன், அவருடன் சென்ற 03 நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply