
இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரும், பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவருமான, கிம்புலா எலே குணாவுடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் (28) பிற்பகல் புளூமெண்டல் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொழும்பு 15, ரெடிபனா எல பகுதியில் வைத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, சந்தேகநபரிடம் இருந்து 13 கிராம் அளவிலான ஹெரோயின், ஐஸ் ஒரு கிராம், கேரளா கஞ்சா 22 கிராம் மற்றும் 160 PREGA TABLETS ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு 15, அளுத் மாவத்தையில் வசிக்கும் 27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்,போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக நம்பப்படும் 105,200 ரூபாவும் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் 3 கையடக்கத் தொலைபேசிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.





