கொழும்பு-மாஸ்கோ விமான சேவை இடைநிறுத்தம்; சுற்றுலாத்துறை அமைச்சர் பதில்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திங்களன்று இலங்கைக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் விமானத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு கட்டுப்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் விமானசேவை நிறுத்தப்பட் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

காப்புறுதிப் பிரச்சினை காரணமாகவே ஸ்ரீலங்கன் விமான சேவையின் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இரு நாடுகளுக்குமிடையிலான விமான சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இடைநிறுத்தப்பட்ட விமானசேவை மீள ஆரம்பிப்பதற்கு மாற்று காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதுடன் விமானசேவை இடைநிறுத்தப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கன் விமான சேவை தனது கட்டுப்பாட்டை மீறிய சம்பவத்தினால் ஒரு நிலைமையை எதிர்நோக்க நேரிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply