வில் ஸ்மித் மீதான விசாரணைகளை ஆரம்பித்தது ஆஸ்கர் நிர்வாகம்!

<!–

வில் ஸ்மித் மீதான விசாரணைகளை ஆரம்பித்தது ஆஸ்கர் நிர்வாகம்! – Athavan News

நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் அடித்த விவகாரம் குறித்து வில் ஸ்மித்திடம் ஆஸ்கர் நிர்வாகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

ஆஸ்கர் விருது விழாவில் ஜாடா பிங்கெட் ஸ்மித்தை  நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் கேலி செய்த நிலையில், அவரை வில் ஸ்மித் மேடையில் வைத்து அடித்திருந்தார். இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகவும் மாறியிருந்தது.

இதனையடுத்து வில் ஸ்மித் மன்னிப்புக்கோரி அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இது குறித்த விசாரணைகளை ஆஸ்கர் நிர்வாகம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply