அனுமதியின் தென்னை மரம் வெட்டத் தடை

கொழும்பு, மார்ச் 29

அனுமதியின்றி தென்னை மரம் வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரமேஷ் பத்திரண கூறியதாவது,

“இலங்கை தேயிலை என்ற நாமம்போல, இலங்கை தேங்காய்க்கும் சர்வதேச சந்தையில் சிறந்த கேள்வி உள்ளது. இது எமது பொருளாதாரத்துக்குப் பெரும் பலமாக அமையும். தேயிலை தொழில்துறைக்கு நிகரான வருமானத்தை இதன் மூலமும் ஈட்ட முடியும்.

மரம் வெட்டுதல் கட்டுப்பாட்டு சட்டத்துக்குள் தென்னை மரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எனவே, இனி கிராம சேவகர், பிரதேச செயலாளரின் அனுமதியின்றி தென்னை மரம் வெட்ட முடியாது. அவ்வாறு வெட்டினால் பொலிஸாரால் கைது செய்ய முடியும் என்றார்.

Leave a Reply