
பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களிலிருந்து பிம்ஸ்டெக் பிராந்தியத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
´பிம்ஸ்டெக்´ என்று அழைக்கப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் 5 ஆவது மாநாடு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளின் பங்கேற்புடன் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.
இந்த மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடா பிராந்திய பொருளாதாரங்கள் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.





