சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்

யாழ்ப்பாணம், மார்ச் 30

யாழ்.கீரிமலை – கூவில் பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கந்தசாமி நிதர்ஷினி (வயது27) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

கெப்பிற்றிகொலாவ பகுதியில் குடும்ப நல உத்தியோகத்தராக பணியாற்றிவரும் இவர்  சுகயீனம் காரணமாக  கடந்த 26ம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் 27 ம் திகதி மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை  உயிரிழந்துள்ளார்.  உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply