ஆயுதப் போராட்டத்தை ஏற்றுகொள்ளும் சிங்கள மக்கள்! – இ.கதிர்

உலக நாடுகளின் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கும் தமிழர்களை ஒரு தரப்பினராக அங்கீகரிக்கின்றோம் என்ற பொய்யான மாயையினை காட்டுவதற்காக மாத்திரமே அரசாங்கம் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்து என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

மக்களால் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நிதானத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் சிங்கள மக்கள், இராணுவ வீரர்கள், சில அரசியல் தலைவர்கள் ஆகியோர் ஆயுத போராட்டத்தினை உண்மையான ஜனநாயக போராட்டமாக ஏற்றுக்கொள்கின்ற சூழ்நிலை காணப்படுகிறது.

அத்துடன் பயங்கரவாதத்தை தடைச்சட்டத்திற்கு எதிராக நடந்த கையெழுத்து போராட்டமானது உலக நாடுகளின் ஆதரவினை பெற்றுக்கொண்டது. மற்றும் தியாக திலீபனின் சிந்தனைககளை இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும், தென்னிலங்கை அரசியல் தலைவர்ளுக்கும் ஒரு தெளிவினை பெற்றுக்கொடுத்திருக்கின்றதோடு அதனை ஏற்றுகொண்டுள்ளனர்.

சிங்கள மக்களின் ஆதரவினை பெற்று ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள அரசு, வரலாறு காண முடியாத பொருளாதார நெருக்கடி மற்றும் பல எதிர்ப்புக்களுக்குட்பட்டு ஆட்சியினை கொண்டு நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், மக்களின் அபிலாஷைகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும், அத்துடன் பொலிஸ் அதிகாரம், நிதியினை கையாளும் அதிகாரம், காணி அதிகாரம் போன்ற பல அதிகாரங்கள் மாகாண சபையி கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.- என்றார்.

Leave a Reply