எரிவாயு விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் லிற்றோ நிறுவனம் கோரிக்கை

கொழும்பு, மார்ச் 30

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் தமது நிறுவனம் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை.  சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தற்போது அதிகாரம் கிடையாது என கூறிய அவர், விலை அதிகரிப்பதற்கான அனுமதியை அமைச்சரவையே வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

Leave a Reply