பங்களாதேசில் இடம்பெற்ற பங்க பந்து கிண்ண சர்வதேச கபடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இலங்கை ஆண்கள் கபடி அணியில் முண்ணனி வீரராக திகழ்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர் ராசோ பென்சினை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இடம்பெற்றது
யாழ்ப்பாண பேருந்து நிலையத்திலிருந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு வாகன ஊர்தி பவனியாக அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.






