
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தும் எரிபொருளினை பெறமுடியாது ஏமாற்றத்துடனும் திரும்பிச்செல்லும் நிலையும் காணப்படுகிறது.
இந்நிலையில் கொழும்பில் இன்றையதினம்(30) டவுன்ஹாலுக்கு அருகில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வருகை தந்த மக்கள் எரிபொருள் கிடைக்காமையால் தாம் கொண்டு வந்த வெற்றுக் கொள்கலன்களை வீதியில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு நெலும் பொகுண திரையரங்கம் நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





