தாடி இல்­லை­யெ­னில் அரச வேலை­யில்லை

தாடி வளர்க்­காத மற்­றும் மத பாரம்­ப­ரி­ய­மான உடை அணி­யாத அரசு ஊழி­யர்­கள் பணி நீக்­கம் செய்­யப்­ப­டு­வர் என தலி­பான்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

ஆப்­கா­னிஸ்­தா­னில் கடந்த ஆண்டு தலி­பான்­கள் ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய நிலை­யில் பல கடும் சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

அவற்­றில் பெண்­கள் தனி­யாக விமான பய­ணம் செய்ய தடை, மேல்­நிலை கல்வி கற்க மாண­வி­க­ளுக்கு அனு­மதி இல்லை, பூங்­காக்­க­ளில் வாரத்­தில் 3 நாள்­கள் மாத்­தி­ரமே பெண்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­ப­வர் ஆகி­யவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில், அரசு ஊழி­யர்­க­ளுக்­கும் கடும் கட்­டுப்­பாட்டை விதித்­துள்­ள­னர்.‘‘அரசு ஊழி­யர்­கள் தாடி வளர்க்க வேண்­டும். மத பாரம்­ப­ரிய உடை­யான மிக நீண்ட ஜிப்பா மற்­றும் தலை­யில் குல்லா அணிய வேண்­டும்’’ என, தலி­பான்­கள் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­னர்.

இதை மீறு­ப­வர்­கள் பணி நீக்­கம் செய்­யப்­ப­டு­வர் என­வும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

Leave a Reply