நாளை 13 மணிநேர மின்தடைக்கு அனுமதி! அட்டவணை வெளியானது

நாளை வியாழக் கிழமை (31) 13 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபையினால் இந்த மாதம் 5 ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி நாளைய தினம் ABCDEF ஆகிய பிரிவுகளில்,

காலை 3 மணி முதல் 6

மதியம் 12 மணி முதல் 4 மணி வரை

மாலை 6 மணி முதல் 12 மணி வரை

GHIJKL ஆகிய பிரிவுகளில்,

காலை 12 மணி முதல் 3

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை

PQRS ஆகிய பிரிவுகளில்,

காலை 3 மணி முதல் 6

மதியம் 12 மணி முதல் 4 மணி வரை

6 மணி முதல் 12 மணி வரை

TUVW ஆகிய பிரிவுகளில்,

காலை 12 மணி முதல் 3

காலை 8 மணி முதல் 12

மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை

MNOXYZ ஆகிய பிரிவுகளில்,

காலை 5.30 முதல் 9 AM வரை

மாலை 4 மணி முதல் 6 மணி வரை

Leave a Reply