10 மணிநேர மின்தடையால் சகல தரப்பினருக்கும் பாரிய பாதிப்பு! எரான் விக்ரமரத்ன

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்படும் 10 மணித்தியால மின்வெட்டு காரணமாக சிறு வியாபாரிகள் முதல் சகல தரப்பினரும் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது பிரச்சினைகள் தீவிரமடைந்து வருகின்றன.

இன்று நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

இந்த 10 மணித்தியால மின்வெட்டு காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

வீடுகளில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவுகள் அனைத்தும் பழுதாகும். இது வீடுகளில் காணப்படும் நிலைமை.

வியாபார நிலையங்களை எடுத்துக்கொள்ளுங்கள், சிறு வியாபாரிகள் முதல் சகல தரப்பினரும் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்- என்றார்.

Leave a Reply