விலங்கியல் பூங்கா திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்துவந்த ஷெர்மிளா ராஜபக்ஷ பதவி விலகினார்.

அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய, தான் பதவி விலகியதாக அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் பதவி விலகியதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்

இன்றைய தினம் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply