
கொழும்பு, மார்ச் 31
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளும் விரைவில் வெளியாகும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் தினேஷ் குணவர்தன ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கையில் கூறுகையில், இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
எதிர்வரும் காலங்களில் திட்டமிட்ட பரீட்சைகளை, திட்டமிட்டவாறே நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





