ஆஸ்திரேலியாவில் கனமழை: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

சிட்னி, மார்ச் 31

ஆஸ்திரேலியாவில் இன்று பெய்த கனமழையால் சில நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அதே நேரத்தில் வேகமாக நகரும் வெள்ள நீர் ஆற்றின் கரைகளை உடைத்து மதகுகளை உடைத்தது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால், அந்நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனையடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

தற்போது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், இரண்டாம் முறையாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதே போல, கடலோர நகரமான பைரன் பே நகரிலும் இடைவிடாது மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Leave a Reply