மின்தடைக்கான பிரதான காரணத்தை வெளியிட்டார் மின்சக்தி அமைச்சர்

நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின்சார துண்டிப்புக்கு பிரதான காரணம் என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சமனலவாவி உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

இவ்வாறு நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினால் மின்னுற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, நாட்டுக்கு தேவையான மின்முனையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply