வீதியில் சாகசம் புரிந்த இளைஞனை அவசர சிகிச்சை பிரிவில் சேவைக்கு அமர்த்திய நீதிமன்று!

சென்னையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சாகச ஓட்டம் புரிந்த இளைஞனுக்கு நீதிமன்று கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது.

சென்னையை சேர்ந்த பிரவீன் எனும் இளைஞன் வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓடி சாகசம் புரிந்துள்ளார்.

வீதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓடியமை , வீதியில் செல்வோருக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றசாட்டுகளின் கீழ் இளைஞனை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்றில் வழக்கினை விசாரித்த நீதவான் , எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு சென்னை அரச மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேவை அடிப்படையில் சிற்றூழியராக கடமையாற்றி , அங்கு கடமை புரிந்த அனுபவத்தை அறிக்கையாக ஒரு மாத கால முடிவில் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply