நாங்களும் மனிதர்கள் தான், எமக்கும் குடும்பம் உள்ளது! – கவலையுடன் தனியார் பேருந்து உரிமையாளர்கள்

தனியார் பேருந்து ஊழியர்கள் மனிதர்கள் இல்லையா,எமக்கு குடும்பம் இல்லையா என யாழ் மாவட்ட தனியார் பேருந்து ஊழியர்கள் கவலையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அவர்கள்சமூகம் மீடியாவுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்:

எரி பொருளிற்காக காலை 5.30 மணியில் இருந்து காத்திருந்தும் எரிபொருள் கிடைக்கவில்லை..

இதை விட விஷத்தினை கொடுத்து கொன்றுவிடுங்கள். லீசிங் கட்டவேண்டும் பிள்ளைகளுக்கு உணவு வழங்கவேண்டும் வரி செலுத்தவேண்டும் காப்புறுதி செலுத்த வேண்டும் ரூட் பொமிற் போன்றவற்றிற்கு பணம் செலுத்த வேண்டும்.

பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துதான் எரிபொருளினை கொள்வனவு செய்ய வந்தால் இங்கும் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை.

அரசாங்கம் காச சுருட்டி கொண்டு போகுதே தவிர வாக்களித்த மக்களுக்கு எந்தவெரு உதவியும் இல்லை. அரசாங்கத்தினால் உண்மையில் மக்களே பாதிக்கப்படடுள்ளனர்.

ஒருநாளைக்கு தொழில் இல்லை என்றால் எவ்வளவு கஷ்டப்படுகின்றோம் என்பது அரசாங்கத்திற்கு விளங்கப்போவதில்லை என்றனர்.

Leave a Reply