நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்-பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை.

நாட்டின் தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் நடத்தி நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

“நாட்டில் எழுபத்தைந்து மில்லியன் மின் பாவனையாளர்கள் இப்போது இருண்ட யுகத்தில் உள்ளதாகவும் இதன் காரணமாக தொழிற்சாலைகள்,சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் குறிப்பாக மருந்து சேமிப்பு வசதிகள் இன்று கடுமையான நெருக்கடியின் பிடியில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் எமக்கு முன்னால் உள்ள நெருக்கடியை இந்த அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் இந்த அரசாங்கத்தின் சில தலைவர்கள் எண்ணையை வழங்கிய பின்னரே தீர்வு காண முடியும் என்ற எண்ணம் உள்ளது.

ஆனால் தற்போது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் உத்தரவுகளினால் இலங்கை மின்சார சபை கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply