யாழில் நாளை முதல் தொழிலை இழக்கும் இரண்டாயிரம் பேர்

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்ராலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது இலங்கை மீனவர்களினது பிரச்சினை குறித்து பேசியமை வரவேற்கத்தக்கது என்று யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசனங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஏப்ரல் 1ஆம் திகதியில் இருந்து தீவகப்பகுதிகளை மையமாகக் கொண்ட கடலுணவு பதனிடும் நிறுவனங்கள் மின்சாரம் இன்மையினால் குழிரூட்ட முடியாத நிலையில், கடலுணவு பதனிடும் நிறுவனங்கள் மூடப்படவுள்ளன.

இதனால் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 1500 மேற்பட்ட கடற் தொழலாளர்களும் பாதிக்கப்படவுள்ளனர்.

தமிழ்நாட்டு முதலமைச்சரிற்கு கடற்தொழிலாளர்கள் அனுப்பிய மகஜரின் பலனாக அதனை கருத்தில் எடுத்த தமிழக முதலமைச்சருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேபோல் இலங்கை அந்திய மீனவர்கள் தொடர்பான இராஜதந்திர பேச்சு வார்த்தைகள் மிக விரைவாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

ஏப்ரல்15ம் திகதியிலிருந்து தமிழ்நாட்டில் இழுவைமடி தொழில் செய்பவர்களிற்கான தடைக்காலம் ஆரம்பிப்பதாகவும் அந்த தடைக்கால நிறைவினை கூடுதலாக 2 மாதம் நீடித்து இலங்கை இந்திய மீனவர்பிரச்சினைக்கு தீர்வினை எடுக்கவேண்டுமெனவும் தமிழ்நாட்டு முதலமைச்சரை வேண்டிக்கொள்வதாகவும் தெரிவிதார்.

Leave a Reply