
பசறை பிரதேசத்திற்குட்பட்ட கனவரல்ல தோட்ட CV2 பகுதியில் தொடர் வீட்டுத்தொகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை ஏழு மணியளவில் இடம் பெற்றுள்ளது.
வீட்டில் உள்ள தளபாடங்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் போன்றவையே தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தினால் குடியிருப்பு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





