
கொழும்பு, மார்ச் 31
சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய 250 கிலோ கிராம் கேரள கஞ்சா நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் மறைத்து வைத்திருந்தாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கைது செய்த போது அவர்களிடம் இருந்த சொகுசு சிற்றுந்து ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





