66 கிலோ 600 கிராம் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், மார்ச் 31

யாழ்ப்பாணம் – கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் வியாழக்கிழமை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 66 கிலோ 600 கிராம் கேளர கஞ்சா மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல்24 வயதுடைய முல்லைத்தீவு மற்றும் மாதகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply