போராட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: ஐ.தே.க தெரிவிப்பு

கொழும்பு, மார்ச் 31

ஐக்கிய தேசிய இனந்தெரியாத குழுக்கள் ஏற்பாடு செய்யும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

அதேசமயம் நாடாளாவிய ரீதியில் எங்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் உறுதியாக உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலும் உள்ள மக்களை வீதிக்கு இறங்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக சில குழுக்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

எரிபொருள் நெருக்கடி, மின்தடை, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு, கட்சி பேதமின்றி போராட்டத்தை நடத்தவுள்ளதாக அந்தக் குழுக்கள் தெரிவித்துள்ளன

Leave a Reply