எரிபொருளின் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

டெல்லி, மார்ச் 31

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து டெல்லி நாடாளுமன்றம் அருகே ராகுல்காந்தி தலைமையில் வியாழக்கிழமை காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் வியாழக்கிழமை முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டம் ஏற்பாடு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply