
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்விநியோக தடை போன்றவற்றால் பல்வேறு தரப்பினரும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந் நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராகவும் ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான –பெங்கிரிவத்தை வீதியில் சற்றுமுன் ஒன்று திரண்ட பொதுமக்கள் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த வீதியினுடனான போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





