
ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் கடந்த ஒருமணித்தியாலத்திற்கும் மேலாக பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தற்போது அங்கு கடும் பதற்றகரமான நிலை உருவாகியுள்ளதுடன் பாதுகாப்பு கடமையினை பலப்படுத்தும் முகமாக குறித்த பகுதிக்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை பொலிஸாரின் தடைகளை மீறி மக்கள் முன்னோக்கி சென்றுகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை தற்போது குறித்த வீதியினுடனான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டதுடன் சில இடங்களில் பொலிஸாருடன் பொதுமக்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டுவருகின்றது.





