ஜனாதிபதியின் வீடு இரவோடிரவாக சுற்றிவளைப்பு: பொலிஸ் இராணுவம் குவிப்பு

கொழும்பு, மார்ச் 31

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டில் மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயுக்கு நீண்ட நேர வரிசை, அதிக நேர மின் துண்டிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இரவோடு இரவாக ஜனாதிபதியின் வீடு அமைந்திருக்கும் இடத்தில் பெருந்தொகையான மக்கள் அணி திரண்டு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.

அலையாகத் திரண்டுள்ள மக்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் கட்டுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply