
மிரிஹான பெங்கிரிவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போதுவரைதொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை வீச்சு மற்றும் கற்கள் பொல்லுகள் கொண்டு தாக்குதல் நடைபெற்றது.
இந் நிலையில் தற்போது அங்கு கடும் பதற்றமான நிலை உருவாகியுள்ளதுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக் காரர்களை மோதித்தள்ளிய இராணுவ வாகனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.





