வாள் வெட்டுக் குழு மீண்டும் அட்டகாசம்

யாழ்ப்பாணம், ஏப்ரல் 1

யாழ்ப்பாணத்தில் மின்சார துண்டிப்பு இடம்பெற்ற வேளை, வன்முறைச் சம்பவம் வியாழக்கிழமை இரவு பதிவாகியுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி தெற்கு முருகன் கோவிலுக்கு அருகாமையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிற்கு மூன்று மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் வீட்டுக்குத் தீ வைத்துள்ளது. இதன் போது 02 மோட்டார் சைக்கிள்கள், வீட்டின் 06 ஜன்னல்கள், வாயில், இரண்டு கண்ணாடி மேசைகள் சேதம் அடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply