மிரிஹானா ஆர்ப்பாட்டம்;காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

மிரிஹானாவில் ஜனாதிபதியின் வாசஸ்தலம் அமைந்துள்ள பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினர் 15 பேரும், 3 பொலிஸார் மற்றும் மூன்று ஊடகவியலாளர்கள் காயமடைந்தநிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply