மருத்துவ நெருக்கடி – வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை மட்டுப்படுத்த கலந்துரையாடல்!

இலங்கையில் மருத்துவ நெருக்கடி நிலை அதிகரித்துவரும் நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மருந்து மற்றும் சுகாதார உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டுக்கு மத்தியில், வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை மட்டுப்படுத்த, வைத்தியசாலை நிர்வாகப் பிரிவுக்குள் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் உள்ள மருத்துகளின் கையிருப்பானது, அடுத்த வாரத்திற்கு மட்டுமே போதுமானதாகும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதென அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பதிலளித்த விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, அவசியமான மருந்துகளின் அளவுகளை, வைத்தியசாலைகளுக்கு தேவையான அளவு விநியோகிப்பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுகாதார கட்டமைப்பு தொடர்பில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்திய வாசன் ரட்ணசிங்கம் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

Leave a Reply