அரசியலுக்கான நேரம் இதுவல்ல!

இது அர­சி­யல் செய்­யும் நேரம் அல்ல. அனை­வ­ரும் நாட்­டைப் பற்றி சிந்­தித்து உழைக்க வேண்­டிய தருணம் –இவ்­வாறு தெரி­வித்­தார் பிர­த­மர் மஹிந்த ராஜ­பக்ச.

5 ஆயி­ரம் குளக்­கட்டு­களை சீர­மைக்­கும் ஆரம்ப நிகழ்வு குரு­நா­க­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­விக்­கை­யில்;
இன்று நாம் மிக­வும் சிர­மப்­ப­டு­கி­றோம். ஒரு நாடாக நாம் ஒரு தொற்று­நோய்க்கு முகங்­கொ­டுத்து வருவது­டன், வர­லாற்­றில் மிக­வும் சவா­லான நேரத்தை எதிர்­கொள்­கி­றோம். உள்­ளூர்­வா­தத்­துக்கு முன்னு­ரிமை அளிக்­கும் பொரு­ளா­தார மேம்­பாட்­டுத் திட்­டமே எங்­கள் நோக்­கம். இத்­திட்­டம் யதார்த்மாகும்­போது விவ­சா­யப் பொரு­ளா­தா­ரத்தை மட்­டு­மன்றி கிரா­மி­யப் பொரு­ளா­தா­ரத்­தை­யும் பலப்­ப­டுத்த முடி­யும்.

இன்று மக்­கள் பல சிர­மங்­களை எதிர்­நோக்கி வரு­வதை நாம் அறி­வோம். இவை நமக்­குத் தெரி­யாதா? அல்­லது அறிந்­தும் அறி­யா­தது போன்று உள்­ளார்­களா என்று சிலர் கேட்­கி­றார்­கள். அத­னால்­தான் அனைத்­துக் கட்சி மாநாட்­டைக் கூட்டி நாட்­டைப் பற்றி சிந்­தித்து, அனை­வ­ரின் கருத்­துக்­களை கேட்டறிந்து, இந்த நிலை­யி­லி­ருந்து மீண்­டெ­ழு­வ­தற்­கான தள­மொன்றை நிர்­மா­ணித்­தோம். கொரோனாத் தொற்று எம்­மால் உரு­வாக்­கப்­பட்­டது அல்ல.

நாங்­களே அதனைச் செய்­தோம் என்று மக்­க­ளைத் தூண்­டி­விட சிலர் முயற்­சிப்­ப­தைப் பார்த்­தேன். எதிர்க்கட்­சி­யில் இருந்­தா­லும் நல்ல யதார்த்­த­மான யோச­னை­களை முன்­வைக்க தயா­ராகவுள்­ளோம். இது அர­சி­யல் செய்­யும் நேரம் அல்ல. ஒவ்­வொ­ரு­வ­ரும் நாட்­டைப் பற்றி சிந்­தித்து உழைக்க வேண்­டிய தரு­ணம் இது –என்­றார்.

மைத்­திரி – ரணில் ஆட்­சிக்­கா­லத்­தில் இரண்டு ரூபா­வால் எரி­பொ­ருள் விலை அதி­க­ரித்­த­தைக் கண்டித்து மஹிந்த போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தார் என்பது குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply