
கொழும்பு, ஏப் 01
கொழும்பு – மருதானை டீன்ஸ் வீதியில் அரச குடும்பநல சுகாதார சேவை சங்க உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக சுகாதார அமைச்சுக்கு முன்னால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
30 ஆண்டுகால சேவை காலத்தை நிறைவு செய்யும் குடும்பநல சுகாதர சேவை உத்தியோகத்தர்களை, விசேட தரத்திற்கு, தரமுயர்த்துவதைக் கைவிடுவதற்கு சுகாதார அமைச்சு மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.





