ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பிலான செய்தியை சேகரிக்கும் பணியில் ஊடகவியலாளர் சஞ்சீவ காலகே ஈடுபட்டபோது அவர் மீது பொலிஸார் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவருக்கு உரிய நீதி வழங்க பொறுப்புள்ளவர்களை வலியுறுத்துவதாகவும் நேற்றைய போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முயற்சிக்கின்றனர் என தெரியவருவதாகவம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





