
பிரதான பரீட்சைகளைத் திட்டமிட்டவகையில் நடத்துவதற்குத் தேவையான காகிதாதிகள் கையிருப்பில் உள்ளன என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
அஸ்கிரிய மகாநாயக்க தேரரை நேற்றுமுன்தினம் சந்தித்த அமைச்சர், பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் மே மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.





