திருமலையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக திருகோணமலை மாவட்ட பௌத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடை பவனியாக திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்தை பதவி விலக கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்

இதேவேளை திருகோணமலை உயர் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களும் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply