பொதுமக்களுக்கு இலங்கை மின்சார சபை கோரிக்கை!

இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட மின் பாவனையை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் தொடர் மின் தடை நெருக்கடி காரணமாக புத்தாண்டு காலத்தில் மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளது.

Leave a Reply