IMF இலங்கைக்கு உதவும் போது விதிக்கப்படும் நிபந்தனைகளை பிரித்தானியா உறுதிப்படுத்த கோரிக்கை

கொழும்பு, ஏப் 15

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை தயக்கத்துடன் சர்வதேச நாணய நிதியத்தை நிதி உதவிக்காக நாடியுள்ள அதேவேளை சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு நிதி வழங்கும் போது இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகளை விதிப்பதை பிரிட்டன் உறுதி செய்யவேண்டும் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஆழமான மாற்றங்கள் மற்றும் அரசியல் ஸ்திரதன்மையை உறுதிசெய்யக்கூடிய நிபந்தனைகளை சர்வதேச நாணயம் நிதியம் விதிப்பதை உறுதி செய்வதற்காக பிரிட்டன் தனது செல்வாக்கை பயன்படுத்தவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சர்வதேச நாணயம் நிதியம் இலங்கைக்கு நிதிஉதவிகளை வழங்கும் பட்சத்தில்நிபந்தனைகளை விதிப்பதை பிரிட்டனின் நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என பிரிட்டனின் 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்காக இலங்கை பொறுப்புக்கூறலை முன்னெடுக்கவில்லை. அதன் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவில்லை என தமிழர்களிற்கான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் எலியட் கொல்பேர்ன் தெரிவித்துள்ளார்.

அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சமாதான பலாபலன்களை இலங்கை ஏற்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நிதி நெருக்கடிக்கான காரணம் முற்றுமுழுதாக பொருளாதாரமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் நிதியமைச்சர் ரிசி சுனாக்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கையில் உருவாகிவரும் பொருளதார நெருக்கடி மற்றும் மனித துயரங்களை கரிசனையுடன் நோக்கிய வண்ணமுள்ளது. 12 வருடங்களிற்கு முன்னர் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தபோதிலும் இலங்கை இலங்கையின் உள்நாட்டு போரின்போது இழைக்கப்பட்ட யுத்த குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை முன்னெடுக்கவில்லை அதன் சமூகங்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவில்லை அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சமாதான பலாபலன்களை இலங்கை ஏற்படுத்தவில்லை இதனை விட மேலும் ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் இலங்கை தொடர்ந்தும் தமிழர்களிற்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளது அங்கு வடக்கு மற்றும் தெற்கை சேர்ந்த மக்கள் உணவில்லாத நிலையையும் எரிவாயு எரிபொருள் மின்சாரம் போன்ற ஏனைய அத்தியாவசிய பொருட்கள் இல்லாத நிலையையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இலங்கையின் நிதி நெருக்கடிக்கான காரணம் முற்றாக பொருளாதாரமில்லை பல காரணங்கள் உள்ளன.

பொருளாதார நடவடிக்கைகளில் தமிழர்களை உள்வாங்க தவறியமை, உண்மையான வெளிநாட்டு உள்நாட்டு அச்சுறுத்தல் இல்லாத போதிலும் – அளவுக்கதிகமான இராணுவத்திற்கான பாரிய பாதுகாப்பு நிதிஒதுக்கீடு அரசியல் நோக்கம் கொண்ட மானியங்கள் மற்றும் மோசமான நிதி கொள்கைகள் இலங்கையை பொருளாதார நெருக்கடிக்கும் வங்குரோத்து நிலைக்கும் இட்டுச்சென்றுள்ளன.

2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுவது இது மூன்றாவது தடவை. கடந்தகாலங்களில் பொருளாதார சீர்திருத்தங்களை மாத்திரம் அடிப்படையாக வைத்து சர்வதேச நாணயநிதியம் விதித்த நிபந்தனைகளால் இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்கமுடியவில்லை.

இலங்கை காப்பாற்றப்படவேண்டும் என்றால் அதன் பாதுகாப்பு செலவீனங்கள் குறைக்கப்படவேண்டும்,இலங்கையின் பாதுகாப்பு செலவீனம் வருடாந்தம் 1.868 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுகின்றது தனது பாதுகாப்பு தேவைக்கு ஏற்ப தனது இராணுவத்தின் அளவை வரையறை செய்வதற்கு 2021 ம் ஆண்டு பிரிட்டன் மேற்கொண்ட மூலோபாய பாதுகாப்பு ஆய்வுபோன்ற ஒன்றை இலங்கை முன்னெடுக்கவேண்டும் .

மேலும் இலங்கை வடக்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தமிழர்கள் அர்த்தபூர்வமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுத்துவருகின்றது. பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கா இதனை நிறுத்தவேண்டும்.

இலங்கைக்கு பொருளாதார ஸ்திரதன்மை அவசியம் அது முதலீட்டாளர்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி நேரடி முதலீட்டை கொண்டுவரும். இதற்கான முதல்கட்டநடவடிக்கையாக இலங்கை பொறுப்புக்கூறல் நீதி தொடர்பான விடயங்களிற்கு தீர்வை காணவேண்டும் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பின்வரும் விடயங்கள் நிபந்தனைகளாக விதிக்கப்படுவதை சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரர் என்ற அடிப்படையிலும் வாக்குரிமை உள்ள நாடு என்ற அடிப்படையிலும் பிரிட்டன் உறுதி செய்யவேண்டும்.

இலங்கை தனது பாதுகாப்பு செலவீனங்களை குறைப்பதற்காக மூலோபாய பாதுகாப்பு மறு ஆய்வினை மேற்கொள்ளவேண்டும். இராணுவம் வடக்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்தவேண்டும். ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கான நிபந்தனைகளை இலங்கை நிறைவேற்றவேண்டும். இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையுடன் இணைந்து செயற்படவேண்டும் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும்.

Leave a Reply