இலங்கைக்கு மனிதாபிமான உதவியை செய்ய வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்

உணவுப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான உதவியாக, அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு, தலைநகர் கொழும்பு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழர்களுக்கு உணவுகள், காய்கறிகள் மற்றும் மருந்துகளை அனுப்புவதற்கான தமிழக அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

கடந்த 31 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது, ​​இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு தமிழகத்தின் விருப்பம் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைத்திருந்தார்.

மேலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை சுட்டிக்காட்டி நேற்று வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் மீண்டும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply