
பதவி காலம் முடியும் வரை தாம் பதவியில் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் விசேட சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றது.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், புதிய ஆட்சியை அமைக்க எதிர்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், எனினும், எதிர்கட்சியினர் முன்வராதமையினாலேயே, புதிய அமைச்சரவை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.





