தமிழகத்தில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறல்!

<!–

தமிழகத்தில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறல்! – Athavan News

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக்  கூறப்பட்டுள்ளது.

இதன்படி தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply