புதிய அமைச்சரவை நியமனம்; கரு ஜயசூரிய கோரிக்கை!

புதிய அமைச்சரவை தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ருவிட்டர் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதில்,

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் கோரி வரும் நிலையில், புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்க உள்ளது. குறைந்த பட்சம் புதிய அமைச்சர்கள் ஊழலற்றவர்களாகவும், மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் எந்தளவுக்கு புரிந்து கொண்டுள்ளது என்பதை புதிய அமைச்சரவை வெளிப்படுத்தும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply